**
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் ஆபிரகாம் லிங்கன். சிறு வயது முதலே பல தோல்விகளை சந்தித்தார் .
தோல்வி என்பது அவரின் வாழ்கையின் ஒரு நிரந்தர நிகழ்வாக இருந்தது.
இருப்பினும் அவரது விடாமுயற்சியால் அவர் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனார்.
அவர் பல முறை முயற்சியை கை விட்டிருக்கலாம், ஆனால் அவர் விடாமுயற்சியுடன் போராடினார்.
அவரின் விடா முயற்சி அவரை அமெரிக்காவின் சிறந்த ஜனாதிபதிகளுள் ஒருவராக பேர் வாங்கும் அளவிற்கு துணை செய்தது.
*இதோ அவர் வாழ்கையில் அடைந்த வெற்றி தொல்விகளின் தொகுப்பு ஆண்டு வாரியாக.*
1816 அவருடைய குடும்பம் தன் வீட்டை இழந்தனர். அவர் தன் குடும்பத்தின் கஷ்டத்தை சமாளிக்க வேலைக்கு அனுப்பப்பட்டார்.
1818 அவருடைய தாயார் காலமானார்.
1831 அவருடைய தொழிலில் பெரும் நஷ்டம் அடைந்தார்.
1832 மாநில தேர்தலில் போட்டியிட்டு தோற்றார்.
1832 அவருடைய வேலையை இழந்தார். சட்ட படிப்பு மேற்கொள்ள சட்ட கல்லுரிக்கு விண்ணப்பித்தார் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
1833 தன் நண்பரிடம் கடன் வாங்கி ஒரு தொழில் தொடங்கினார். அந்த வருடத்தின் கடைசியில் அந்த தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளானார். அவர் அந்த கடன் தொகையை அடைக்க 17 வருடங்கள் ஆனது.
1834 மீண்டும் மாநில தேர்தலில் போட்டியிட்டார் - இம்முறை வெற்றி.
1835 திருமணம் நிச்சயம் ஆனது ஆனால் அவருடைய காதலி இறந்து விட்டார். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
1836 மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு ஆறு மாதங்கள் படுத்த படுக்கை ஆனார்.
1838 சபாநாயகர் பதவிக்கு போட்டியிட்டார் - தோல்வி அடைந்தார்.
1840 தேர்தல் ஆணையராக போட்டியிட்டார் - தோல்வி அடைந்தார்.
1843 நாடாளுமன்ற பதவிக்கு போட்டியிட்டார் - தோல்வி அடைந்தார்.
1846 நாடாளுமன்ற பதவிக்கு மீண்டும் போட்டியிட்டார் - இம்முறை வெற்றி வாஷிங்டன் சென்று சிறப்பான முறையில் பனி புரிந்தார்.
1848 மீண்டும் நாடளுமன்ற தேர்தலில் களமிறங்கினார் - தோல்வி அடைந்தார்.
1849 தன்னுடைய சொந்த மாகாணத்தில் நில மேலாளர் பதவிக்கு முயற்சி செய்தார் - நிராகரிக்கப்பட்டது.
1854 செனட் உறுப்பினர் பதவிக்கு முயற்சி செய்தார் - தோல்வி அடைந்தார்.
1856 தன்னுடைய கட்சி துணை ஜனாதிபதியாக முயற்சி செய்தார் - 100 க்கும் குறைவான வாக்குகளே கிடைத்தது.
1858 மீண்டும் அமெரிக்க செனட் பதவிக்கு போட்டியிட்டார் - தோல்வி
1860 அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
இப்படி வெற்றியும் தோல்வியும் அவர் வாழ்கையில் மாறி மாறி வந்தாலும் அவரது விடாமுயற்சி தான் அவரை அமெரிக்காவின் சிறந்த ஜனாதிபதிகளுள் ஒன்றாக அவரை திகழவைத்தது.
*அவர் வாழ்க்கையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம் "விடா முயற்சி" கண்டிப்பாக நல்ல பயனை தரும் என்பதே.*
😊😊😊