ஆர்டிஇ மாணவர் சேர்க்கை எல்.கே.ஜி வகுப்பிற்கு 81,927 பேர் விண்ணப்பம்!
Oct 28 2025
18
சென்னை, அக். 25 - எட்டாம் வகுப்பு வரையிலான கட்டாய மற்றும் இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான இறுதிக்கட்ட பணிகள் அடுத்த வாரம் தொடங்குகின்றன. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் தமிழகத்திற்கான கல்வி நிதியை தரு வோம் என்று ஒன்றிய பாஜக அரசு கூறி வந்தது.
நிதி ஒதுக்கீட்டை 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைத்தது. இது தொடர்பான வழக்கில், கல்வி உரிமைச் சட்டத்திற்கான நிதியை வேறு எந்தப் பிரச்சனையோடும் முடிச்சுப் போடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டது. உச்ச நீதிமன்றமும் இதேபோல அறி வுறுத்தியதால், வேறு வழியின்றி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய சுமார் 700 கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசு விடுவித்தது. இந்த நிதி விடுவிப்பைத் தொடர்ந்து, தமி ழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாண வர் சேர்க்கை தற்போது மீண்டும் தொடங்கப் பட்டுள்ளது.
இதில், தமிழகம் முழுவதும் 7,717 தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்க்க விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் எல்.கே.ஜி வகுப்பிற்கு 81,927 மாணவர்களும், முதல் வகுப்பிற்கு 89 மாணவர்களும் விண் ணப்பித்துள்ளனர். இந்நிலையில், விண்ணப்பங்களின் எண் ணிக்கை இட ஒதுக்கீட்டை விட குறைவாக உள்ள பள்ளிகளில் தகுதியான மாணவர்கள் அக்.30 அன்று, நேரடியாகச் சேர்க்கப்படுவர். விண் ணப்பங்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில் அக். 31 அன்று பெற்றோர்கள் முன்னிலையில் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாண வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு செய் யப்பட்ட அனைத்து மாணவர்களின் விவரங் களும் கல்வி மேலாண்மை தகவல் முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தகுதி பெறும் மாணவர்களிடம் இருந்து எவ்வித கட்டண மும் வசூலிக்கக் கூடாது என்றும், ஏற்கனவே வசூ லிக்கப்பட்ட தொகையும் 7 வேலை நாட்களுக் குள் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என் றும் மாநில அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித் துள்ளனர். இந்த நடைமுறைகளை கண்கா ணிக்க மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?