news Breaking News
clock

இந்தியாவில் 2025-ல் 19 விமான விபத்துகள்: மத்திய அரசு தகவல்

இந்தியாவில் 2025-ல் 19 விமான விபத்துகள்: மத்திய அரசு தகவல்


 

புதுடெல்லி,


நாடாளுமன்ற மேலவையில் கேள்வி ஒன்றிற்கு மத்திய விமான போக்குவரத்து துறை இணை மந்திரி முரளிதர் மொஹல் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், நாட்டில் 2025-ம் ஆண்டில் 19 விமான விபத்துகள் மற்றும் தீவிர சம்பவங்கள் நடந்துள்ளன.


இதுதொடர்பாக விமான விபத்து புலனாய்வு வாரியம் விசாரித்து வருகிறது. அதில், ஒரு தீவிர சம்பவம் பற்றிய விசாரணை நிறைவடைந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் அறிக்கை விமான விபத்து புலனாய்வு வாரியத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மற்ற விமான விபத்துகள் மற்றும் தீவிர சம்பவங்கள் பற்றி தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மராட்டியத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிரசாரம் செய்வதற்காக துணை முதல்-மந்திரி அஜித் பவார், சிறிய ரக சார்ட்டர்டு விமானத்தில் கடந்த 28-ந்தேதி காலை புறப்பட்டு சென்றார். விமானம் பாராமதி நகரில் ஓடுதளத்தில் காலை 8.48 மணியளவில் தரையிறங்கியபோது திடீரென விபத்தில் சிக்கியது.


இதில், விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த துயர சம்பவத்தில் சிக்கி, அஜித் பவார் மற்றும் அவருடன் ஒன்றாக பயணித்த பாதுகாப்பு அதிகாரி, 2 விமானிகள் மற்றும் விமான ஊழியர் ஒருவர் என மொத்தம் 5 பேரும் பலியானார்கள். அவருடைய மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News