இனி கிராமப்புறங்களில் டீக்கடை முதலான தொழில் செய்பவர்களுக்கும் லைசென்ஸ் கட்டாயம் - தமிழக அரசு உத்தரவு..!

இனி கிராமப்புறங்களில் டீக்கடை முதலான தொழில் செய்பவர்களுக்கும் லைசென்ஸ் கட்டாயம் - தமிழக அரசு உத்தரவு..!

கிராம பஞ்சாயத்திற்கு ஏற்ற வகையில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை லைசென்ஸ் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கிராமப் பகுதிகளில் டீக்கடை முதலான தொழில் செய்பவர்களும் இனி லைசென்ஸ் வாங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து வணிகம் அல்லது தொழில் உரிமம் வழங்குவதற்கான விதிகள் 2025 என்ற சட்டத்தை கடந்த சட்டமன்ற கூட்டத்தில் தமிழக அரசு நிறைவேற்றியது. இதற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் படி கிராம பஞ்சாயத்து பகுதிகளில் வணிகம் அல்லது தொழில் செய்பவர்கள் இனி அதற்குரிய கட்டணத்தை செலுத்தி லைசென்ஸ் பெற வேண்டும்.

இதன்படி நகர்ப்புறம் அருகில் உள்ள கிராம பஞ்சாயத்துகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகள் என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அதேபோல உற்பத்தி மற்றும் சேவைகள் என இரண்டு பிரிவுகள் உள்ளன. இதற்கான விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய் ஆகும்.

5 லட்ச ரூபாய் முதலீட்டிற்கு உட்பட்ட தொழிலுக்கு குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை லைசென்ஸ் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல 5 லட்சம் முதல் 2.5 லட்சம் வரையிலான முதலீடு உள்ள தொழில்களுக்கு குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் 5000 வரையும் அதற்கு மேற்பட்டவைகளுக்கு குறைந்த பட்சம் 35 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையும் லைசென்ஸ் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி டீக்கடை, ஓட்டல்கள், விவசாய பொருட்கள் உள்ளிட்ட 48 உற்பத்தி தொழில்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் இரும்பு பொருட்கள் பழைய பேப்பர் விற்பனை, கொரியர் , அச்சகம், இறைச்சி கடை, தையல் தொழில், சலவை தொழில், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 119 சேவை தொழில்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

கிராம பஞ்சாயத்திற்கு ஏற்ற வகையில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை லைசென்ஸ் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தொழில் செய்யும் இடங்களும் தமிழ்நாடு கட்டிட விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். கழிவு மேலாண்மை, தீ பாதுகாப்பு, சுகாதார வசதிகள் போன்றவற்றை பராமரிக்க வேண்டும். தமிழில் எழுத்துப் பலகை வைக்க வேண்டும். ஸ்பா, அழகு நிலையங்கள், மசாஜ் சென்டர்கள் ஆகியவை கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும் . வாடிக்கையாளர்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தின்படி கிராம ஊராட்சிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். அதேபோல கிராம ஊராட்சிகளில் எத்தனை பேர் என்னென்ன தொழில்கள் செய்கின்றனர் என்ற புள்ளி விவரமும் அரசிடம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது..



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%