=========================
இரவின் வெளிச்சங்கள் குறித்து
சில கேள்விகள் இருந்தன..
உன் நிலவு வருடல்கள்
கிளர்தலுற்று சற்று
வெளிச்சம் போர்த்திக்கொண்டு
என் இரவெங்கும்
சுற்றித்திரிந்தன..
மூச்சடைத்துக்கொண்டிருக்கும்
காரிருளை தூசுதட்டி
வெளியேற்றிக்கொண்டிருந்தன
உன்னாலானதோர் வெளிச்சப்புள்ளிகள்..
என்னை அவ்வப்போது
அமிழ்த்திக்கொண்டிருந்தது
உன் பிரிவெனும் துயர்..
தூர மேகங்களில்
கலைந்துசேர்பவை
நம் மீட்சிமையாய்
இருக்கலாம் ஒருவேளை..
தூர்வாடப்படாத
குளத்திற்கப்பால்
என் நாரைகள் சில
பரிதவித்துக்கொண்டிருந்தன..
கிளையொடிந்த மரங்களின் உச்சியில்
சிறகிழந்த பறவைகளாய்
வலியடைந்து கிடந்தன
உன் வெளிச்சம் மறுக்கப்பட்ட
சில இரவுக்கனவுகள்..
ஆயினும்
பாறையிடுக்கினில் வேர்பிடித்துக்கிடந்தது
உன் அன்பிலானதோர்
அக்கினிக்குஞ்சு..!
ம.முத்துக்குமார்
வே.காளியாபுரம்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?