இவ்வளவு பொய் பேசும் தலைமை தேர்தல் ஆணையரை பார்த்ததே இல்லை’’ - டெல்லியில் மம்தா காட்டம்

இவ்வளவு பொய் பேசும் தலைமை தேர்தல் ஆணையரை பார்த்ததே இல்லை’’ - டெல்லியில் மம்தா காட்டம்


 

புதுடெல்லி: “இவ்வளவு ஆணவத்துடன் நடந்து கொள்ளும், இவ்வளவு பொய் பேசும் ஒரு தலைமைத் தேர்தல் ஆணையரை நான் பார்த்ததே இல்லை” என்று தலைமைத் தேர்தல் ஆணையருடனான சந்திப்புக்குப் பிறகு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காட்டமாக சாடினார்.


திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை இன்று சந்தித்தார். அவருடன் 15 பேர் கொண்ட கட்சி நிர்வாகிகளும், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தால் பாதிக்கப்பட்ட ஏராளமான பொதுமக்களும் சென்றனர்.


இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ‘‘நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன். நான் டெல்லி அரசியலில் நீண்ட காலமாக இருக்கிறேன். 4 முறை அமைச்சராகவும், 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளேன்.


இவ்வளவு ஆணவமாகவும் இவ்வளவு பொய் பேசுபவராகவும் இருக்கும் ஒரு தலைமைத் தேர்தல் ஆணையரை நான் பார்த்ததே இல்லை. உங்கள் நாற்காலியை நான் மதிக்கிறேன் என்று நான் அவரிடம் சொன்னேன். ஏனென்றால், எந்த நாற்காலியும் யாருக்கும் நிரந்தரமல்ல. ஒரு நாள் நீங்கள் வெளியேறத்தான் வேண்டும்.


மேற்கு வங்கம் ஏன் குறிவைக்கப்படுகிறது? ஜனநாயகத்தில் தேர்தல்கள் ஒரு திருவிழா. ஆனால், நீங்கள் 58 லட்சம் பெயர்களை நீக்கிவிட்டீர்கள். அவர்களுக்கு இருக்கும் உரிமையை அவர்கள் பாதுகாத்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.


தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றால், தேர்தல் நடைபெறும் மாநிலங்களை தவிர்த்துவிட்டு முறையான திட்டமிடலுடன் செய்திருக்க வேண்டும். ஆனால், நீங்கள் (தேர்தல் ஆணையம்) அவ்வாறு செய்யவில்லை. அசாமில் தீவிர திருத்தப் பணிகளை நீங்கள் மேற்கொள்ளவில்லை. ஆனால், மேற்கு வங்கத்திலும் தமிழ்நாட்டிலும் செய்திருக்கிறீர்கள்.


மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கிவிட்டீர்கள். இதில் நிறைய முரண்பாடுகளும் தவறான பதிவுகளும் உள்ளன என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%