இஷான் கிஷன் 3-வது இடத்தில் விளையாடுவார்: சூர்யகுமார் யாதவ் உறுதி

இஷான் கிஷன் 3-வது இடத்தில் விளையாடுவார்: சூர்யகுமார் யாதவ் உறுதி


 

நாக்பூர்: இந்​தியா - நியூஸிலாந்து அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடரின் முதல் ஆட்​டம் நாக்​பூரில் இன்று நடை​பெறுகிறது. இதையொட்டி நேற்று நடை​பெற்ற பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பின் போது இந்​திய அணி​யின் கேப்​டன் சூர்ய குமார் யாதவ் கூறிய​தாவது:


இஷான் கிஷன் டி20 உலகக் கோப்பை அணி​யின் ஒரு பகு​தி​யாக இருப்​ப​தால் அவர், நியூஸிலாந்துக்கு எதி​ரான டி 20 தொடரில் 3-வது இடத்​தில் பேட்​டிங் செய்​வார். அணி​யில் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுப்​பது எங்​கள் பொறுப்​பு.


இஷான் கிஷன் கடந்த ஒன்​றரை ஆண்​டு​களாக இந்​திய அணிக்​காக விளை​யாட​வில்​லை. உள்​நாட்டு போட்டிகளில் சிறப்​பாக விளை​யாடியதன் வாயி​லாக அவர், மீண்​டும் தேசிய அணிக்​குள் வந்துள்ளார்.


உலகக் கோப்பை தொடருக்கு இஷான் தேர்வு செய்யப்பட்டுள்​ள​தால் அவர், ஸ்ரேயஸ் ஐயருக்கு முன்னதாக களமிறங்கி விளை​யாடு​வதற்கு தகுதியானவர். துர​திருஷ்ட​வ​சமாக திலக் வர்மா இல்லாததால் அந்த இடத்​துக்கு இஷான் கிஷனே சிறந்த வீர​ராக இருப்​பார். நான் 3-வது இடத்​தி​லும், 4-வது இடத்திலும் இந்​திய அணிக்​காக விளை​யாடி உள்​ளேன். 4-வது இடத்​தில் எனது புள்​ளி​விவரங்​கள் சற்று சிறப்​பாகவே உள்​ளன.


இஷான் கிஷனும், திலக் வர்​மா​வும் 3-வது இடத்தில் சிறப்​பாக விளை​யாடக்​கூடிய​வர்​கள். எனினும் நாங்​கள் எந்த இடத்​தி​லும் களமிறங்கி விளை​யாடும் திறனை கொண்டுள்ளோம்.


சமீப​கால​மாக நான் அதி​கள​வில் ரன்​கள் சேர்க்​க​வில்​லை. ஆனால் என் அடை​யாளத்தை என்​னால் மாற்ற முடி​யாது. கடந்த மூன்று அல்​லது நான்கு வருடங்​களாக நான் செய்து வரு​வதைத் தொடர்ந்து செய்ய முடிவு செய்​துள்​ளேன், அதனால் எனக்கு நிறைய வெற்றி கிடைத்​துள்​ளது.


சிறந்த செயல்​திறன் வெளிப்​பட்​டால் அதை எடுத்​துக்​கொள்​வேன், இல்​லை​யென்​றால், மீண்​டும் கடின​மாக பயிற்சி மேற்​கொள்​வேன்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%