news Breaking News
clock

ஈராக், சிரியாவில் ஐ.எஸ். நிலைகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்

ஈராக், சிரியாவில் ஐ.எஸ். நிலைகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்


 

டமாஸ்கஸ்


சிரியாவில் 2024-ம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், நடந்து வரும் அரசானது, அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


இந்நிலையில், சிரியாவின் பல்மைரா நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 2 பேர் மற்றும் அமெரிக்க குடிமகன் ஒருவர் என 3 பேர் பலியானார்கள். இதற்கு பதிலடி தரும் வகையில் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதி நிலைகளை குறி வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.

 

இந்நிலையில், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ். அமைப்பினரின் நிலைகளை குறி வைத்து அமெரிக்க பாதுகாப்பு படை மீண்டும் கடுமையான வான்வழி தாக்குதலை நடத்தி உள்ளது. இதில், கடந்த 3-ந்தேதி முதல் 10 நாட்களில் 30-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். நிலைகள் மீது 10 முறை வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.


இதில், அந்த அமைப்பினரின் உட்கட்டமைப்புகள், ஆயுத கிடங்குகள் தாக்கி அழிக்கப்பட்டன. இதற்காக, பல்வேறு வகையான விமானங்களில் இருந்து குண்டுகள் சரியாக வீசப்பட்டும், ஆளில்லா டிரோன்கள் உதவியுடனும் தாக்குதல் நடந்து உள்ளது.


அமெரிக்க வீரர்களான எட்கர் பிரையன் டோரஸ்-தோவர், வில்லியம் நதானியேல் ஹோவர்ட் மற்றும் அயாத் மன்சூர் சகாத் என 3 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாகவே தாக்குதல் நடந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 13-ந்தேதியில் இருந்து இந்த தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News