ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, இஸ்ரேல் தீவிரம்

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, இஸ்ரேல் தீவிரம்


 

வாஷிங்டன்: ஈ​ரான் மீது மிகப் பெரிய அளவில் தாக்​குதல் நடத்த அமெரிக்கா​வும், இஸ்​ரேலும் தயா​ராகி வரு​வ​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.


ஈரானில் அடக்​கு​முறை​களுக்கு எதி​ராக போராட்டம் நடத்திய மக்கள் மீது அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயி​ரிழந்​தனர். பொது​மக்​களை கொல்வதை நிறுத்​தா​விட்​டால், ஈரான் மீது தாக்​குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏற்​கெனவே எச்சரிக்கை விடுத்​திருந்​தார்.


இதற்​கிடை​யில், அமெரிக்கா - ஈரான் இடையே ஜெனி​வா​வில் நடைபெற்ற அணு ஆயுத ஒழிப்பு பேச்​சு​வார்த்தை பலன் அளிக்கவில்லை என்​றால், ஈரான் மீது மிகப் பெரிய தாக்​குதல் நடத்த அமெரிக்கா​வும், இஸ்​ரேலும் தயா​ராகி வரு​வ​தாக தகவல்கள் தெரிவிக்​கின்​றன.


ஈரான் அருகே யுஎஸ்​எஸ் ஆபிர​காம் லிங்​கன் விமானம் தாங்கி போர்க்​கப்​பல் தனது துணைப் போர்க் கப்​பல்​களு​டன் தயார் நிலை​யில் உள்​ளது. இந்​நிலை​யில் யுஎஸ்​எஸ் ஜெரால்ட் ஆர்ஃபோர்ட் போர்க் கப்​பலும் மத்​திய கிழக்கு நோக்கி அனுப்பப்பட்​டுள்​ளது.


மேலும், அமெரிக்கா போர்த் தளவாடங்​களை மத்​திய கிழக்கு பகுதி​யில் குவித்​துள்​ளது. இது மிகப் பெரிய தாக்​குதலுக்கு அமெரிக்கா​வும், இஸ்​ரேலும் தயா​ராகி வரு​வது போல் தெரி​கிறது. இந்த தாக்​குதல் சில வாரங்​கள்​ தொடரலாம்​ எனவும்​ கூறப்படுகிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%