ஈஷா மஹாசிவராத்திரி: சர்வதேச ஆன்மீக கொண்டாட்டம்! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்

ஈஷா மஹாசிவராத்திரி: சர்வதேச ஆன்மீக கொண்டாட்டம்!  மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்



கோவை, பிப். –


ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. சத்குரு முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு உட்பட பல முக்கியப் பிரமுகர்கள் விருந்தினர்களாக கலந்து கொண்டார்.


ஈஷா மஹாசிவராத்திரி விழா தியானலிங்கத்தில் சத்குரு வழிநடத்திய ‘பஞ்ச பூத க்ரியாவுடன்’ தொடங்கியது. முன்னதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தியானலிங்கம், லிங்கபைரவி சன்னதிகளில் தரிசனம் செய்தார்.


இவ்விழாவில் சத்குரு பேசுகையில், “யோகாவின் முழு முயற்சியும், எனது முயற்சியும், ஆதியோகியின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால முயற்சியும், மக்கள் யாரும் தங்களுக்குத் தாங்களே ஒரு தடையாக இருக்க கூடிய ஒரு பேரழிவாக மாறிவிடக்கூடாது என்பதே. உங்கள் சொந்த மனம், எண்ணம், உணர்ச்சி மற்றும் ஆற்றல்கள் உங்களுக்கே ஒரு தடையாக மாறாமல் இருப்பதை ஒவ்வொருவரும் உறுதி செய்ய வேண்டும். இதை எளிதாக்குவதுதான் யோகக் கலை என்றார்.


‘பவ்ய பாரத் பூஷண்’ விருதுகள்


ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் இந்தாண்டு முதல் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த சாதனையாளர்களை அங்கீகரிக்கும் வகையில் பவ்ய பாரத் பூஷண் என்ற பெயரில் விருதுகள் வழங்கப்படும் என சத்குரு அறிவித்தார்.


அந்த வகையில் இந்தாண்டு விருதுகள் வயலின் கலைஞர் டாக்டர் என்.ராஜம், பரதநாட்டிய கலைஞர் அலர்மேல்வள்ளி, விண்வெளி விஞ்ஞானிகள் நம்பி நாராயணன், கிரண் குமார், வரலாற்றாசிரியர் விக்ரம் சம்பத், பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஆப்ரேஷன் சிந்தூரில் பங்காற்றிய ராணுவ வீரர்களை அங்கீகரிக்கும் வகையில் ஏர் மார்ஷல் ஜித்தேந்திர மிஷ்ரா, கடற்படை தலைமை அதிகாரி ராகுல் விலாஸ், ராணுவ அதிகாரி ராத்தே உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஆதியோகி திருவுருவம் பதித்த விருது பதக்கங்களை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.


பாரத தேசத்தின் பண்பாட்டு மறுமலர்ச்சி


இவ்விழாவில் ராஜ்நாத் சிங் பேசுகையில், “நான் காசியில் இருந்து வருகிறேன். காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இருக்கும் தொடர்பு மிகவும் பழமையானது. காசி உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று என்றால், தமிழ் பண்பாடோ உலகின் மிகப் பழமையானது. மொழி, பண்பாடு, சமையல் கலை போன்ற பற்பல அம்சங்களில் தமிழ்நாடு நம் வரலாற்றில் வளமான இடத்தை வகிக்கிறது.


யோகேஷ்வர லிங்க மஹா அபிஷேகம்


சத்குருவின் வழிகாட்டுதலில் ஈஷாவில் நிகழும் மஹாசிவராத்திரி விழா சர்வதேச அளவிலான ஆன்மீக கொண்டாட்டமாகவும், பாரத தேசத்தின் பண்பாட்டு மறுமலர்ச்சியின் புதிய பிரகடனமாகவும் விளங்குகிறது.” எனக் கூறினார்.


தொடர்ந்து இரவு முழுவதும் நடைபெற விழாவில் சத்குரு வழிநடத்திய சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், யோகேஷ்வர லிங்க மஹா அபிஷேகம் மற்றும் தலைசிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.


இவ்விழாவில் பங்கேற்கும் மக்கள் இரவு முழுவதும் விழிப்பாக இருக்க உதவும் வகையில் ராப் இசைக்கலைஞர் பிளேஸ், குஜராத் நாட்டுப்புறக் கலைஞர் ஆதித்யா காத்வி, தபேலா இசைக் கலைஞர் பிரசாந்த் சோனாக்ரா, ராஜஸ்தான் நாட்டுப்புறக் கலைஞர் ஸ்வரூப் கான், ராப் இசைக்கலைஞர் பாரடாக்ஸ் மற்றும் சவுண்டஸ் ஆப் ஈஷா குழு ஆகியோர் இசை நிகழ்ச்சிகளை வழங்கினர்.


இதனுடன் ‘புராஜக்ட் சம்ஸ்கிருதி’ குழுவின் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சியும், ஈஷா சம்ஸ்கிருதி பள்ளி மாணவர்களின் தேவார பண்ணிசை மற்றும் களரிப்பயட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%