உக்ரைன் - ரஷியா போர் முடிவுக்கு வருமா? - சுவிட்சர்லாந்தில் மீண்டும் பேச்சுவார்த்தை
வாஷிங்டன்,
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 454வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
போர் நிறுத்தம் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், ஒரு சில நிபந்தனைகளுக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொள்ளாததால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அமெரிக்கா முயற்சியால் மீண்டும் ரஷியா, உக்ரைன் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் இந்த பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றும், நாளையும் 2 நாட்கள் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு சுமார் 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உக்ரைன், ரஷியா இடையேயான போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?