உஜ்வாலா திட்டத்திற்கு ரூ. 12 ஆயிரம் கோடி மானியம்; மத்திய மந்திரி சபை ஒப்புதல்
Aug 09 2025
26

டெல்லி,
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டம் கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 12 முறை கியாஸ் சிலிண்டரை ரூ. 300 கொடுத்து நிரபிக்கொள்ளலாம். அந்த தொகை மீண்டும் பயனாளர்களின் வங்கி கணக்கிற்கே மானியமாக ஒவ்வொரு முறையும் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில், உஜ்வாலா திட்டத்திற்கு ரூ. 12 ஆயிரம் கோடி மானியம் விடுவிக்க மத்திய மந்திரி சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2025-26ம் ஆண்டுக்கான உஜ்வாலா திட்டத்திற்கு ரூ. 12 ஆயிரம் கோடி மானியம் விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மானியத்தொகை மூலம் உஜ்வாலா திட்டத்தில் உள்ள 10.33 கோடி பேர் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?