உண்ணாவிரதத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றார் சசிகாந்த் செந்தில்

உண்ணாவிரதத்தை தற்காலிகமாக  வாபஸ் பெற்றார் சசிகாந்த் செந்தில்

சென்னை:

தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய பாஜக அரசு வழங்காமல் இருப்ப தைக் கண்டித்து திருவள்ளூர் மக்களவைத் தொகுதி காங்கி ரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மேற்கொண்ட உண்ணா விரதப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வந்தார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்ட தால், தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் நியாயமான கோரிக்கைகளைக் கூட பாஜக அரசு செவிமடுக்க மறுத்து வருகிறது என்று விமர்சித்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%