என்னதான் வழியோ
இவ்வுலகில் பிழைக்க
சின்னதாய்ப் பிறந்த
சிறுபுழு பூச்சிக்கும்
வயிற்றுக்கு உணவளித்து
வாழும் வகைசொல்லி
பயிற்று வித்தான்
பரம்பொருள் இறைவனே!!
இயற்கையின் படைப்பிலே
எத்தனை விந்தைகள்
முயற்சியால் வாழ்ந்திட
வழியுண்டு ஆயிரம்
அவரவர் உடற்கூறு
அதன்படி உறுப்புகள்
தவறின்றி படைத்தவன்
தரணியின் இறைவனே!!
அன்பையும் பண்பையும்
அத்தனை உயிருக்கும்
அன்பாலே தந்தவன்
அனைவர்க்கும் அதையே
அளித்திரு நீயென்று
சொன்னவன் அவனே
துளியேனும் உணர்வோமா
துணையாக இருப்போமா?
மற்றவரின் துயர்தீர்த்து
மனம்பார்த்து உதவியே
உற்றவர் பெற்றவர்க்கு
உறுதுணை யாயிரு!
என்னதான் வழியென்று
ஏங்கி நிற்காதே
தன்னம்பிக் கைமட்டுமே
தவறாமல் கொண்டிரு
வைரமணி
சென்னை
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?