news Breaking News
clock

எப்ஸ்டீன் கோப்புகள்! கைதான சில மணிநேரங்களில் பிரிட்டன் மன்னரின் சகோதரர் விடுதலை!

எப்ஸ்டீன் கோப்புகள்! கைதான சில மணிநேரங்களில் பிரிட்டன் மன்னரின் சகோதரர் விடுதலை!


எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பிரிட்டனின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ சில மணிநேரங்களில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவைச் சேர்ந்த பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக, கைது செய்யப்பட்டு சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.


அமெரிக்க நீதித் துறை அண்மையில் வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள், தலைவர்கள் எப்ஸ்டீனுடன் பகிர்ந்த விடியோக்கள், புகைப்படங்கள், மின்னஞ்சல்கள் குறித்த தரவுகள் வெளியாகி உலகளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கின.


பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் சகோதரரான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் விண்ட்சரின் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.


மேலும், அமெரிக்க நீதித் துறை வெளியிட்ட கோப்புகளின் அடிப்படையில், கடந்த 2004 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பிரிட்டனின் சர்வதேச வர்த்தக தூதராகப் பதவி வகித்த ஆண்ட்ரூ தனது அதிகாரபூா்வத் தகவல்களை எப்ஸ்டீனிடம் பகிா்ந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.


இந்த நிலையில், விசாரணையின் ஒருபகுதியாக, ஆண்ட்ரூவை கடந்த வியாழக்கிழமை (பிப். 20) பிரிட்டனின் தேம்ஸ் வேலி காவல் துறையினா் கைது செய்தனர். இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், சட்டம் தன் கடமையைச் செய்யும் என பங்கிங்காம் அரண்மனை வெளியிட்ட செய்தியில் மன்னர் சார்லஸ் கூறியிருந்தார்.


இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சில மணிநேரங்களில் வியாழக்கிழமை மாலை முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ விடுதலை செய்யப்பட்டதாக, பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவருக்குச் சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.


முன்னதாக, ஆண்ட்ரூவின் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளால் நடைபெற்ற மாபெரும் போராட்டங்களைத் தொடர்ந்து அவரது இளவரசர் பட்டத்தை மன்னர் மூன்றாம் சார்லஸ் பறித்தது குறிப்பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News