
பாரத் ராஷ்ட்ரிய சமிதி (பிஆர்எஸ்) கட்சியில் இருந்து கவிதா செப்.2 அன்று இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் செப். 3 அன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், தனது அரசியல் எதிர் காலம் குறித்த முடிவை வரும் நாட்களில் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித் துள்ளார். பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலை வரும் தெலுங்கானா முன்னாள் முதல்வ ருமான கே.சந்திரசேகர ராவ், தனது மகளும் நிஜாமாபாத் மேலவை உறுப்பி னருமான கவிதாவை, கட்சியில் இருந்து இடைநீக்கம்செய்வதாக செவ்வாயன்று அறிவித்தார். எம்எல்சி கவிதா கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அக்கட்சியின் அறிக்கையில் தெரிவிக் கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கவிதா, கட்சிப் பொறுப்புகளை தான் ராஜினாமா செய்வதாகவும், அத்துடன் எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்வதா கவும் அறிவித்தார். மேலும் அவர் தனது குடும்பத்தை சிதைக்கவும் பிஆர்எஸ் கட்சியை கைப் பற்றவும் சதி நடக்கிறது. அதன் முதல் அத்தியாயமாகத்தான் என்னை இடை நீக்கம் செய்திருக்கிறார்கள். எனது தந்தை கே.சந்திரசேகர ராவ் மற்றும் சகோதரர் கே.டி. ராமாராவ் ஆகியோருக்கும் இதேபோன்ற அச்சுறுத்தல் இருக்கிறது என தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்களுக்கு பின்னால் அவரது உறவினரும் முன்னாள் அமைச்ச ருமான ஹரிஷ் ராவ்தான் இருப்பதாக வும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?