வான் பாதுகாப்பு அமைப்புகள் கூடுதல் கொள்முதல் இந்தியா- ரஷ்யா பேச்சுவார்த்தை

வான் பாதுகாப்பு அமைப்புகள் கூடுதல் கொள்முதல்  இந்தியா- ரஷ்யா பேச்சுவார்த்தை

ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 டிரை யம்ப் ரக வான்பாதுகாப்பு அமைப்பு களை கூடுதலாக வாங்க இந்தியா, ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவ தற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரிகளை விதித்துள் ளார். இந்நிலையில் ஷாங்காய் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, சீன பிரதமர் ஜி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோர் சந்தித்தனர். டிரம்ப்பின் வர்த்தகப் போருக்கு எதிராக இந்த தலைவர்களின் சந்திப்பு மிக முக்கியத்துவம் பெற்றது. இந்த சந்திப்பிற்கு பிறகு ரஷ்யாவின் எஸ் 400 டிரையம்ப் வான்பாதுகாப்பு அமைப்புகளை கூடுதலாக வாங்க இந்தியா ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதை அந்நாட்டு ராணுவக் கூட்டமைப்பின் தலைவர் திமிட்ரி ஷுகயேவ் தெரிவித்துள்ளார். 2018 இல் 5 எஸ்-400 ட்ரையம்ப் வான்பாதுகாப்பு அமைப்புகளை வாங்க ரஷ்யாவுடன் 5.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. ஆனால் அந்த பாதுகாப்பு அமைப்புகள் இன்னும் இந்தியாவிற்கு வழங்கப்படவில்லை.இந்நிலையில் மேலும் இரு யூனிட்களை 2026- 2027 ஆம் ஆண்டுக்குள் வாங்க இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%