news Breaking News
clock

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என் ரோல் மாடல்‘கிங் மேக்கராக’ விரும்பவில்லை; நான் வெல்வேன்: விஜய் பேட்டி

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என் ரோல் மாடல்‘கிங் மேக்கராக’ விரும்பவில்லை; நான் வெல்வேன்: விஜய் பேட்டி


சென்னை, ஜன. –


இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெறப்போவது உறுதி என்னும்போது, அரசியலில் நான் ஏன் கிங்மேக்கராக இருக்கப் போகிறேன் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.


விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னர் முதன்முறையாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். சென்னையில் அவரைச் சந்தித்த அந்த ஊடகக் குழுவினரிடம் விஜய் கூறியதாவது:–


கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வலியில் இருந்து இன்னும் என்னால் மீண்டு வர முடியவில்லை. இதுபோன்று நடைபெறும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.


நான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறேனோ அதில் நான் உறுதியாக இருப்பேன். எனது இலக்குகள் பற்றி அறியாமல் நான் எதையும் செய்வதில்லை. அந்த வகையில், அரசியல் தான் எனது எதிர்காலம் என்று நான் முடிவு செய்துவிட்டேன்.


எனது படத்துக்கு


அரசியல் நெருக்கடி


அரசியலுக்கு வருவதால் நான் நடித்த படம் குறிவைக்கப்படும் என்று எதிர்பார்த்தேன். ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீட்டுக்குச் சிக்கல் வரும் என்று நான் முன்கூட்டியே கணித்திருந்தேன். எனது படம் அரசியல் காரணங்களுக்காக நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு நான் மனதளவில் தயாராகியிருந்தேன். ஆனால் படம் தள்ளிப்போவதால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நெருக்கடிக்காக நான் வருந்துகிறேன்.


அரசியலில் நான் கிங்மேக்கராக முத்திரை குத்தப்பட விரும்பவில்லை. நான் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற சூழல் இருக்கும்போது நான் ஏன் கிங்மேக்கராக இருக்கப் போகிறேன். எனக்குச் சேரும் கூட்டத்தை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள் தானே!.


நான் பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்துள்ளேன். இனி அரசியல் செய்வது என்று தீர்மானித்துதான் வந்துள்ளேன். இந்த மாற்றம் அத்தனை எளிதாக நடந்துவிடவில்லை. அரசியலில் எனது ரோல் மாடல் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தான். இவ்வாறு அந்தப் பேட்டியில் விஜய் கூறியுள்ளார். மேலும், விஜய் தான் ஷாருக்கானின் தீவிர ரசிகர் என்றும் தெரிவித்துள்ளார்.


தவெகவுக்கு அண்மையில் தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியது. பொதுச் சின்னம் கிடைத்ததை தவெக தலைவர் விஜய் முதல் வெற்றி என்று கூறியிருந்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News