கச்சா எண்ணைய் விலையில் இந்தியாவுக்கு மேலும் சலுகை; ரஷியா முடிவு

கச்சா எண்ணைய் விலையில் இந்தியாவுக்கு மேலும் சலுகை; ரஷியா முடிவு

மாஸ்கோ,


ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையடுத்து இந்தியாவுக்கு அபராதமாக 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இதனால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஆனாலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை. தொடர்ந்து ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து வருகிறது.


ஏற்கனவே இந்தியாவுக்கு கச்சா எண்ணை விலையில் தள்ளுபடி சலுகையை ரஷ்யா அளித்து வருகிறது. ஜூலை மாதம் பீப்பாய்க்கு ஒரு அமெரிக்க டாலரும், கடந்த வாரம் 2.50 அமெரிக்க டாலரும் தள்ளுபடி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணை விலையில் மேலும் தள்ளுபடியை ரஷ்யா அளித்து உள்ளது. அமெரிக்க வரிகளின் சுமையை இந்தியா எதிர்கொண்டு வருவதால், ரஷ்ய எண்ணையின் விலையில் இந்தியாவுக்கு ஒரு பீப்பாய்க்கு 3 முதல் 4 அமெரிக்க டாலர்கள் வரை குறைத்துள்ளது. செப்டம்பர் பிற்பகுதியிலும், அக்டோபர் மாதத்திலும் ஏற்றுமதி செய்யப்படும் ரஷ்யாவின் யூரல் தரத்திலான கச்சா எண்ணை குறைந்த விலையில் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்த நிலையில் இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 வான் பாதுகாப்பு கவச அமைப்புகளை வழங்க பேச்சு நடத்தி வருவதாக ரஷ்யா தெரிவித்து உள்ளது. 5 வான் பாதுகாப்பு கவச அமைப்புகளை வாங்க ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதில் மூன்று எஸ்-400 வான் பாதுகாப்பு கவச அமைப்புகள் வழங்கப்பட்டுவிட்டன. இதற்கிடையே ரஷ்ய ராணுவ பாதுகாப்பு தொழில்நுட்ப தலைவர் டிமிட்ரி ஷூகாயேவ் கூறும் போது, எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இந்தியா வாங்கியுள்ளது. தற்போது புதிய வினியோகங்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்றார். எஸ்-400 வான் பாதுகாப்பு கவச அமைப்புக்கு இந்தியா சுதர்சன சக்கரம் என்று பெயர் சூட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%