கட்டுமானத் தொழிலாளர் குழந்தைகளுக்கு திறன் பயிற்சி

கட்டுமானத் தொழிலாளர் குழந்தைகளுக்கு திறன் பயிற்சி



திருநெல்வேலி, ஜன.

- தமிழ்நாடு கட்டுமான தொழில்களில் ஈடுபட் டுள்ள தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் அரசால் ஏற்படுத்தப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இணைய வழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது. பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக், ஐடிஐ ஆகிய படிப் புகளை முடித்துள்ளவர்கள் மற்றும் நடப்பு கல்வி ஆண்டில் இந்த படிப்புகளை படித்து வருபவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். கட்டுமான தொழி லாளர்கள் நல வாரிய நிதி உதவியுடன் தமிழ்நாடு கட்டுமான கழகம் மூலம் இணைய வழியில் நடக்கும் இந்த பயிற்சி யில் 40 வகையான தொழில் நுட்ப நவீன பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும். இதில் ஏதேனும் ஒரு பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எனவே, நெல்லை மாவட்டத்தில் தமிழ் நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரி யத்தின் மூலம் உயர் கல்வி உதவி தொகை பெறும் அல்லது ஏற்கனவே உதவி தொகை பெற்ற, பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு தங்கள் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம். பயிற்சி தொடர்பான படிவத்தை பாளை திருமால் நகரில் உள்ள தொழிலாளர் உதவி ஆணை யர் அலுவல்கத்தை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளலாம் என்று உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட் டம்) மணிகண்ட பிரபு தெரிவித்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%