குப்பைகளை சாலையில் கொட்டி போராட்டம்

குப்பைகளை சாலையில் கொட்டி போராட்டம்



ஒட்டன்சத்திரம், ஜன.

- திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, வடமதுரை ஒன்றியத்திற்கு உட்பட்ட சுக்காம்பட்டி கிராமம், எஸ்.புதுப்பட்டி பகுதி யில் சுமார் 700 குடும்பங்கள் வசித்து வரு கின்றன. இப்பகுதியில் ஊராட்சி மன்றத்தின் தூய்மைப் பணியாளர்கள் நாள்தோறும் வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்து, அந்தந்த தெருக்களில் ஒருங்கிணைத்து வைப்பர். சேகரிக்கப்பட்ட குப்பைகள் அரசால் வழங்கப்பட்ட பேட்டரி வாகனம் மூலம் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பேட்டரி வாகனம் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இந்த பழுதை சீரமைக்க ரூ.5 ஆயிரம் செல வாகும் என தெரியவந்த நிலையில், ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் போதிய நிதி இல்லா ததால், தூய்மைப் பணியாளர்களே சொந்த செலவில் வாகனத்தை சீரமைக்க வேண்டும் என ஊராட்சி செயலர் பெரியசாமி தெரிவித்த தாக கூறப்படுகிறது. இதனால் வீடு வீடாகச் சென்று சேகரித்த குப்பைகளை குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனைக் கண்டித்து தூய்மை பணியாளர்கள் அனை வரும் தாங்கள் சேகரித்த குப்பைகளை அய்ய லூரிலிருந்து கடவூர் செல்லும் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக தலையிட்டு, பேட்டரி வாகனத்தைசீரமைத்து தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூய்மைப் பணியாளர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%