கட்டுமானப் பணியின் போது நேர்ந்த துயரம் மே.வங்க தொழிலாளர்கள் 3 பேர் மண் சரிந்து பலி!

கட்டுமானப் பணியின் போது நேர்ந்த துயரம் மே.வங்க தொழிலாளர்கள் 3 பேர் மண் சரிந்து பலி!



உதகை, ஜன. - நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வட மாநிலத் தொழிலா ளர்கள் 3 பேர் 30 அடி மண் திட்டு சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட ஓதனட்டி பகுதி யில் வீடு கட்டுவதற்காக, மேற்குவங்கத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (22), நசீர் (33), உஸ்மான் (36) ஆகிய தொழிலாளர்கள் மண் திட்டை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 30 அடி மண் சுவர் இடிந்து விழுந்து மண்ணில் புதைந்தனர். தகவல் அறிந்து, அருவங்காடு காவல்துறை யினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், வரு வாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்ட னர். முதற்கட்டமாக ஒரு நபரை உயிருடன் மீட்டு குன் னூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். எனினும் அவர் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மற்ற இருவரை யும் உயிரிழந்த நிலையிலேயே மீட்க முடிந்தது. அனைத்து உடல்களையும் பிரேத பரிசோத னைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. அரவங்காடு காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%