பாஜக வைத்துள்ள பேனருக்கும் கூட்டணிக்கும் சம்பந்தமில்லை!

பாஜக வைத்துள்ள பேனருக்கும் கூட்டணிக்கும் சம்பந்தமில்லை!



சென்னை, ஜன.  - அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூட்டணி தொடர்பான அறி விப்பை இதுவரை வெளியிடவில்லை. எனினும், மதுராந்தகத்தில் ஜனவரி 23 அன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் பாஜக மாநாட்டிற்கான வர வேற்பு பதாகையில் டி.டி.வி. தினகரன் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இதனால் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ. க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. இணைந்துவிட்டதா? என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து சென்னை யில் டி.டி.வி.தினகரனிடம் செய்தியா ளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “பதாகை யில் எனது புகைப்படத்தை யாரோ ஆர்வத் தில் வைத்திருக்கிறார்கள். இது குறித்து வைத்தவர்களிடம்தான் கேட்க வேண்டும். அ.ம.மு.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை உரிய நேரத்தில் உரியவர்கள் அறிவிப்பார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி யும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது என்று நான் நம்பு கிறேன். எனவே நிச்சயமாக கூட்டணி ஆட்சி தான் வரும். அ.ம.மு.க. இடம்பெறும் கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். கூட்டணிக்கு நான் தலைமை தாங்கி னால் நான் அது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவேன். ஆனால் இன்னொரு கூட்டணியில் நான் சேர்கின்றபோது அந்த கூட்டணிக்கு தலைமை தாங்குபவர்கள் அதை வெளிப்படையாக அறிவிப்பார்கள்” என்று தெரிவித்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%