கணினி வழியாகவும் சுருக்கெழுத்து, தட்டச்சு தேர்வுகள்

கணினி வழியாகவும் சுருக்கெழுத்து, தட்டச்சு தேர்வுகள்



தமிழக அரசு அறிவிப்பு சென்னை, டிச. 29 - தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் இதுநாள் வரையிலும் நேரடியாக நடைபெற்றுவந்த சுருக்கெழுத்து, தட்டச்சு தேர்வுகள் வரும் ஆண்டிலிருந்து கணினி வழியாகவும் நடைபெறவிருக்கிறது. இதுதொடர்பாக இயக்ககத்தின் சார்பில் ஓர் அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு: 2026 பிப்ரவரியில் நடைபெறவுள்ள சிஓஏ (COA - Computer on Office Automation), ஆங்கிலம் - தமிழ் சுருக்கெழுத்து, ஆங்கிலம் - தமிழ் தட்டச்சு ஆகிய தேர்வுகள் கணினி அடிப்படையிலான தேர்வுகளாகவும் (CBE-Computer based examinations), இதுநாள் வரையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நேரடித் தேர்வுகளாகவும் (TME-Traditional Method of Examinations) நடத்தப்படும். சுருக்கெழுத்து நேரடித் தேர்வுகள் பிப்ரவரி 7, 8 தேதிகளில் நடைபெறுகின்றன. தட்டச்சுத் தேர்வுகள் பிப்ரவரி 14, 15 தேதி களில் நடைபெறுகின்றன. சுருக்கெழுத்துத் தட்டச்சுப் பயில கங்களில் கணினி வழியே தேர்வுகள் பிப்ரவரி 23 தேதியிலிருந்து ஏப்ரல் 20-ஆம் தேதி வரை யிலும் கட்டம் கட்டமாக நடைபெறுகிறது. பயிலகங்களில் கணினி வழி தேர்வு நடை பெறுவதற்கு சாத்தியமில்லாத பயிலகங்கள் மாவட்டங்களில் தொழில்நுட்ப இயக்ககத் தால் அறிவிக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக்கு களில் தேர்வுகள் நடத்தப்படும். இந்தத் தேர்வு கள் ஏப்ரல் 21-க்குப் பின்னர் நடைபெற உள்ளன. அனைத்து வகைகளிலும் நடைபெற்ற தேர்வுகளின் முடிவுகள் ஏப்ரல் 30 அன்றும், பாலிடெக்னிக்குகளில் நடைபெற்ற தேர்வு களின் முடிவுகள் மே 20 அன்றும் வெளியிடப் படும். 2026 மற்றும் 2027 ஆண்டுகளில் இவ்விரு வகைகளிலும், பின்னர் 2028-இலிருந்து கணினி வழியில் மட்டுமே தேர்வுகள் நடைபெ றும் என்று தெரிகிறது. கணக்கியல் தேர்வுகள் (accountancy) மட்டும் வழக்கம்போல் நேரடியாகவே நடைபெறும். (ந.நி.)


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%