கண்டெடுத்த தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் கவுரவிப்பு

கண்டெடுத்த தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் கவுரவிப்பு

சென்னை:

சென்னை திரு​வான்​மியூர் பகு​தி​யில் தூய்​மைப்​பணி​யின்​போது கிடைத்த தங்​கச் சங்​கி​லியை காவல் நிலத்​தில் ஒப்​படைத்த தூய்​மைப் பணி​யாளரை மாநக​ராட்சி மேயர் ஆர்​.பிரியா நேற்று கவுர​வித்​தார்.


இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்​சி, அடை​யாறு மண்​டலத்​தில் இ.சி.ஆர் பிர​தான சாலை​யில், மருதீஸ்​வரர் கோவில் எதிரே, நேற்று முன்​தினம் (செப்​.4) தூய்​மைப் பணி​யின் போது தங்​கச் சங்​கி​லியை கண்​டெடுத்த தூய்​மைப் பணி​யாளர் கிளா​ரா, அதை உடனடி​யாக திரு​வான்​மியூர் காவல் நிலை​யத்​தில் ஒப்​படைத்​தார்.


இதையறிந்த முதல்​வர் ஸ்டா​லின், தூய்​மைப் பணி​யாளர் கிளா​ரா​வின் நேர்மை செயலை பாராட்டி வாழ்த்​துத் தெரி​வித்​தார். துணை முதல்​வர் உதயநி​தி, கிளா​ராவை தனது முகாம் அலு​வல​கத்​துக்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரி​வித்​து, வெகுமதி வழங்​கிப் பாராட்​டி​னார்.


ரூ.10 ஆயிரம் ரொக்​கப் பரிசு: முதல்​வரின் உத்​தர​வின்​படி, நேர்​மை​யாகச் செயல்​பட்ட தூய்​மைப் பணி​யாளர் கிளா​ராவை ரிப்​பன் மாளி​கைக்கு நேற்று வரவழைத்த மேயர் ஆர்​.பிரி​யா, அவருக்கு சால்வை அணி​வித்​து, மாநக​ராட்சி சார்​பில் ரூ.10 ஆயிரம் ரொக்​கப் பரிசை வழங்​கிப் பாராட்​டி​னார்.


இந்​நிகழ்ச்​சி​யில், மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணை​யர் (சு​கா​தா​ரம்) முனை​வர் வீ.ப.ஜெயசீலன், திடக்​கழிவு மேலாண்மை கண்​காணிப்​புப் பொறி​யாளர் ஏ.எஸ்​.​ முரு​கன், செயற்​பொறி​யாளர் விஜய் அரவிந்த் ஆகியோர் உடனிருந்​தனர். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%