news Breaking News
clock

கண்ணியத்தை கடைபிடியுங்கள்” - மாநிலங்களவைத் தலைவர் பேச்சு

கண்ணியத்தை கடைபிடியுங்கள்” - மாநிலங்களவைத் தலைவர் பேச்சு


 

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ம் நாளான நேற்று மாநிலங்களவையில், அதன் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றினார்.


அப்போது அவர் கூறியதாவது: மொத்தம் 30 அமர்வுகளைக் கொண்ட இந்த கூட்டத்தொடர், மத்திய பட்ஜெட் மற்றும் சில சட்ட முன்மொழிவுகளை ஆய்வு செய்வதில் கவனம் செலுத்தும். சபையிலும் குழுக்களிலும் நடைபெறும் விவாதங்களில் உறுப்பினர்கள் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்க வேண்டும்.


தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, திட்டமிடப்பட்ட ஒவ்வொரு நிமிடத்தையும் உறுப்பினர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். கருத்து வேறுபாடுகள் மற்றும் உற்சாகமான விவாதங்கள் மூலமே நமது ஜனநாயகம் செழிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


--------

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News