கதிரவனைப் பார்த்து

கதிரவனைப் பார்த்து


சூரியனைச் சிறைப் பிடிப்போம்! சுடர் ஔியெடுத்து.. பார்வையற்றோர் விழிகளுக்குள் பதிப்போம்!


ஆதவனை அழைத்து வந்து.. போதையிலே படுத்தவரின்.. புத்தியிலே அடித்து பாய்ச் சுருட்ட வைப்போம்!


பரிதியினை பறித்தெடுத்து பசியென்று தவிப்பவர்க்கு.. செரிமானமாகும்வரை

சுடும் பசியைத் தீர்ப்போம்!


தினகரனை தேர் ஏற்றி தெருத்தெருவாய் இழுத்து வந்து குடிசைவாழ் பாமரர்க்கு கொள்கையினை விதைப்போம்.!


கதிரவனை கையிருத்தி கனகமணிச் சுடரெடுத்து கல்லாதப் பேருக்கெல்லாம் அறிவொளியாய் பதிப்போம்!


ஞாயிற்றை பணிந்து நின்று.. நாளும் எம் வாழ்வினினே.. புத்துணர்ச்சி வழங்குயென்று பூபாளம் இசைப்போம்!


வே.கல்யாண்குமார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%