போச்சம்பள்ளி வட்டம் புளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்வு நடைபெற்றது. தமிழ் கூடல் நிகழ்விற்கு பள்ளியில் தலைமை ஆசிரியர் துரைராஜீ தலைமை தாங்கி தலைமை உரை ஆற்றினார். தமிழாசிரியர் பிரசாந்தி வரவேற்புரையாற்றினார். தமிழாசிரியர் சம்பத்குமார், பழனியம்மாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தேவீர அள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்து லட்சுமணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ் கூடல் நிகழ்வில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி சிறப்புரையாற்றினார். கணித ஆசிரியர் குமார் விழாவினை ஒருங்கிணைத்தார். நிறைவாக ஆசிரியர் கணேசன் நன்றி நவில விழா இனிதே நிறைவு பெற்றது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?