news Breaking News
clock

கனவு நனவான நாள்: முதலமைச்சர் பெருமிதம்

கனவு நனவான நாள்:  முதலமைச்சர் பெருமிதம்

சென்னை:

‘தமிழ்நாடு நாள் தமிழ்கூறு நல்லுலகின் வர லாற்றில் தனிப்பெரும் நாள்’ என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தமிழ்நாடு நாள் - தமிழ்கூறு நல்லுலகின் வர லாற்றில் தனிப்பெரும் நாள். ஜூலை 18, 1967 - திமுக எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது. ‘தமிழ்நாடு’ என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள்” என்று குறிப்பிட்டுள்ளார். “அதுவரை இல்லாத சிறப்பாய்த் தாய் நிலத்துக்குத் தலைமகன் பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டி ‘தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு’ என மூன்று முறை பேரவையில் முழங்க, மேசையொலிகள் விண்ணதிர்ந்த இந்நாள்தான் தமிழ்நாடு நாள்” என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News