news Breaking News
clock

கருட பகவானின் சிறப்புகள்

கருட பகவானின் சிறப்புகள்


கருடனை தன் வாகனமாக பெருமாள் ஏற்றபோது, ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் இருப்பாய்’ என்று வரமளித்தார்.

உலகில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் காக்கும் கடவுளாகிய மகாவிஷ்ணுவின் வாகனமாகவும், கொடியாகவும் இருக்கும் சிறப்பினை பெற்றவர் கருட பகவான்.

பெருமாள் கோவில்களில் இவர் ‘பெரிய திருவடி’ என்று அழைக்கப்படுகிறார். விஷ்ணு தலங்கள் அனைத்திலும் கருவறைக்கு எதிராக தனிச்சன்னிதியில் வீற்றிருப்பார். கோவில் மதில்களில் நான்கு புறத்திலும், இவர் சிறகினை விரித்து பறக்க தயார் நிலையில் இருப்பதை காணலாம்.

கருடனை தன் வாகனமாக பெருமாள் ஏற்றபோது, ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் இருப்பாய்’ என்று வரமளித்தார். பெருமாள் கோவில் பிரமோற்சவத்தின் போதும், கருட சேவையின் போதும், பல்வேறு விழாக்களின் போதும் பெருமாள், கருடன் மீது அமர்ந்து வீதி உலா வந்து அருள்பாலிப்பார்.

பெருமாள், கருடாழ்வார் மீது அமர்ந்து வீதி உலா வருவதில் ஒரு சூட்சுமம் அடங்கியுள்ளது. ‘கோவிலுக்கு வர இயலாத பக்தர்களுக்கு, அவர்கள் இல்லம் நாடி அருள்புரிய இறைவன் வருகிறான்’ என்பது தான் அந்த சூட்சுமம்.

கருட தரிசனம் சுப தரிசனமாகும். கருடன் மங்கள வடிவானவன். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கோவில்களில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும் போது கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம்.

ஸ்ரீகருடாழ்வார் ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார்.

பெருமாள் கோவில்களில் மூலவருக்கு முன்பாக நேராக எழுந்தருளி இருக்கும் இவரையே பக்தர்கள் முதலில் வணங்க வேண்டும். பக்தர்களுக்கு சிறிய துன்பம் ஏற்பட்டாலும் துயர் துடைத்து இன்பம் அருளி உரிய நேரத்தில் காப்பவர் இவர்.


*கருட தரிசனம் தரும் பலன்கள்!*


அதிகாலையில் அருணோதய நேரத்தில், கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும். வியாழன் பஞ்சமியில் சுவாதி நட்சத்திரத்தில் கருட பஞ்சாங்கத்தை படிப்பது அமோக பலனை தரும். சுவாதியில் மாலை நேர கருட தரிசனம் மிகவும் விசேஷம்.


*கிழமைகளில் கருட தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்களைப் பார்க்கலாம்.*


#ஞாயிறு– பிணி விலகும்.

#திங்கள்– குடும்ப நலம் பெருகும்.

#செவ்வாய்– துணிவு பிறக்கும்.

#புதன்– பகைவர் தொல்லை நீங்கும்.

#வியாழன்– நீண்ட ஆயுள்.

₹வெள்ளி– திருமகள் திருவருள் கிட்டும்.

#சனி– முக்தி அடையலாம்.


*கருட மந்திரம்:*

ஒருவர் தொடர்ந்து ஆறு மாதம் கருட மந்திரத்தை உச்சரித்து வந்தால், அவரது பார்வைக்கு தன் சக்தியின் ஒரு துளியை கருடன் தருகிறார் என்பது ஐதீகம் ஆகும். அந்த கருட மந்திரம் இது தான்..


தத்புருஷாய வித்மஹே 

ஸீபர்ண பக்ஷாய தீமஹீ 

தன்னோ கருட பிரசோதயாத்!


கருட பகவானை வணங்குவோம்! எண்ணற்ற பலன்களை பெறுவோம்!!



ப. கோபிபச்சமுத்து,

 பாரதியார் நகர்,

கிருஷ்ணகிரி - 1

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News