கல்லூரி மாணவிகள் உடை மாற்றும்போது... மறைந்திருந்து படம் பிடித்த சக மாணவர்கள்; வைரலான வீடியோ
Oct 19 2025
12

சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து, உமேஷ் ஜோஷி, அஜய் கவுடு மற்றும் ஹிமான்சு பைராகி ஆகிய 3 மாணவர்களை கைது செய்திருக்கிறோம் என போலீசார் கூறினர்.
போபால்,
மத்திய பிரதேசத்தின் மாண்ட்சார் மாவட்டத்தில் பான்புரா பகுதியில் மகாராஜா யஷ்வந்த் ராவ் ஹோல்கார் அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் 2 நாட்களுக்கு முன் இளைஞர்களுக்கான திருவிழா ஒன்று நடத்தப்பட்டது. அதில் கலாசார நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அப்போது, நிகழ்ச்சியின்போது, உடை மாற்றுவதற்காக கல்லூரி மாணவிகள் உடை மாற்றுவதற்கான அறை ஒன்றிற்குள் சென்றுள்ளனர். அப்போது, சக மாணவர்கள் 4 பேர் அவர்களுக்கு தெரியாமல் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
அவர்கள் அறைக்கு வெளியே நின்று, கல்லூரி மாணவிகள் உடை மாற்றும்போது மொபைல் போன் உதவியுடன் அவர்களை படம் பிடித்து உள்ளனர். அப்போது, சரியாக தெரிய வேண்டும் என்பதற்காக அவர்களில் ஒரு மாணவரின் தோள் மீது மற்றொரு மாணவர் ஏறி நின்று அறையின் உள்ளே நடக்கும் நிகழ்வுகளை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக படம் பிடித்து உள்ளனர்.
இதுபற்றி அறிந்த கல்லூரியின் முதல்வர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வைரலாகி வருகின்றன. இதுபற்றி மாண்ட்சார் மாவட்டத்தின் போலீஸ் சூப்பிரெண்டு வினோத் மீனா கூறும்போது, சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து, உமேஷ் ஜோஷி, அஜய் கவுடு மற்றும் ஹிமான்சு பைராகி ஆகிய 3 மாணவர்களை கைது செய்திருக்கிறோம் என கூறினார்.
இவர்கள், அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளனர். சம்பவத்திற்கு பின்னர், ஏ.பி.வி.பி. அமைப்பின் நகர செயலாளர் பொறுப்பில் இருந்து உமேஷ் ஜோஷி உடனடியாக விடுவிக்கப்பட்டார். அவர்களுடைய மொபைல் போன்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. கைது செய்யப்பட்ட நபர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?