
அமிர்தசரஸ், அக்.11–
பஞ்சாபிலிருந்து பீகார் சென்ற ரெயிலில் ஏற்பட்ட ‘திடீர்’ தீ விபத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து சஹர்சா (பீகார்) சென்று கொண்டிருந்த ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரெயிலின் 19வது பெட்டியிலிருந்து புகை வருவதை அறிந்த பயணிகள், அபாயச் சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர். தீ விபத்தை அறிந்த அதிகாரிகளும், தீப்பற்றிய பெட்டிகளை பிற பெட்டிகளிலிருந்து துண்டித்து விட்டனர்.
மேலும், துரிதமாகச் செயல்பட்ட பயணிகள், ரெயிலினுள் இருந்து வெளியே குதித்து உயிர்த் தப்பினர். குழந்தைகள் மற்றும் உடமைகளுடன் கீழே குதித்த சிலர் காயம் அடைந்தனர்.
இந்தத் தீவிபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை. தொடர்ந்து, பயணிகள் பாதுகாப்பாக வேறொரு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிர்ஹிந்த் ரெயில் நிலையம் அருகே நிகழ்ந்த இந்த தீவிபத்தில் ரெயிலின் 3 பெட்டிகள் எரிந்து நாசமடைந்தது. இந்நிலையில், தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்குள் தீ முழுவதும் கட்டுப்படுத்தப்படுத்தினர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?