news Breaking News
clock

அயோத்தியில் தீபோற்சவம்: 26 லட்சம் விளக்குகள் சரயு நதிக்கரையில் ஏற்றப்படுகிறது

அயோத்தியில் தீபோற்சவம்:  26 லட்சம் விளக்குகள் சரயு நதிக்கரையில் ஏற்றப்படுகிறது



அயோத்தி, அக்.18–


ராமர் பிறந்த இடமான அயோத்தியில், ஆண்டு தோறும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் தீபோற்சவம், இந்த ஆண்டு கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக சரயு நதிக்கரையில் 26 லட்சத்துக்கு மேல் விளக்குகள் ஏற்றப்படுகிறது.


14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து, ராவணனை வதம் செய்துவிட்டு அயோத்தி திரும்பும் ராமனை வரவேற்கும் வகையில், அயோத்தி மக்கள் நகரம் முழுவதையும் விளக்குகளால் அலங்கரித்ததை நினைவுகூறும் வகையில் இந்த தீபோற்சவம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.


இந்த நாளில் நதிகரையைச் சுற்றிலும் ஏராளமான மக்கள் திரண்டு வந்து விளக்குகளை ஏற்றி, நகரையே நட்சத்திரம் போல ஜொலிக்க வைப்பது வழக்கம்.


இந்த நிலையில் இந்த ஆண்டு இன்று தொடங்கி 20ம் தேதி வரை சரயு நதிக்கரையில் இந்த தீபோற்சவம் நடைபெறவிருக்கிறது. அப்போது கடந்த ஆண்டு சாதனையை உடைத்து, 26 லட்சம் விளக்குகளுக்கு மேல் ஏற்றி கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இதனுடன், டிரோன்கள் பறக்கவிடுவது, லேசர் விளக்குகள், கலாசார நிகழ்வுகளுடன் அயோத்தி மாநகரம் களைகட்டுகிறது. இந்த தீபோற்சவத்தின்போது, புதிய கின்னஸ் சாதனை படைக்க அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். தேவையான பொருள்களை வாங்க ஒப்பந்தங்கள் விடப்பட்டு, அனைத்து பொருள்களும் வாங்கப்பட்டுள்ளன. அகல் விளக்குகள், எண்ணெய், திரி, வத்திப்பட்டி என அனைத்தும் வாங்கப்பட்டுள்ளது.


விளக்கேற்றும் தன்னார்வலர்கள், அடிப்படை வசதிகள் என அனைத்தும் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரயு நதிக் கரைக்கு வர பல்வேறு நுழைவுப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.சுமார் 100 கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவிருக்கின்றன. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், இந்த தீபோற்சவம் பல்வேறு சாதனைகளைப் படைக்கும் வகையில் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News