கள்ளக்குறிச்சியில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டி: கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார்
Dec 31 2025
81
கள்ளக்குறிச்சி டிச
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்த இந்திய காவல்பணி இயக்குனர் சீமா அகர்வால் உத்தரவின் படி கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி மைதானத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இவ்விழாவில், விழுப்புரம் மண்டல துணை இயக்குநர் கா.தென்னரசு தலைமையில், விழுப்புரம் மாவட்ட அலுவலர் பாஸ்கரன், கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலர் இருசம்மாள், நாகை மாவட்ட அலுவலர் முகுந்தன், மற்றும் விழுப்புரம் மண்டலத்தைச் சார்ந்த உதவி மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தும், ஒலிம்பிக் தீபம் ஏற்றிவைத்தும் விழாவினை தொடங்கி வைத்தார். இவ்விழாவில், கள்ளக்குறிச்சி போக்குவரத்து ஆய்வாளர் இளையராஜா நடுவராக இருந்து விளையாட்டு போட்டிகளை முன் நின்று நடத்தி வருகிறார்.
இந்த விளையாட்டு போட்டிகளில், கடலூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?