news Breaking News
clock

கவி நாயகன் பாரதி

கவி நாயகன் பாரதி



பாட்டுக்கொருப் புலவன் பாரதி தமிழ்நாடு கண்ட பாரதி


கூட்டுக்களியினிலே கவிதைகள் கொண்டுதர கேட்டவராம்


காணி நிலம் வேண்டி பராசக்தியை பணிந்தவராம்


அச்சம் என்பதை துச்சமெனச் சொல்லிக் கொடுத்தவராம்


எட்டாத உயரத்தான் எட்டைய புரத்தான்

ஏட்டில் எழுதி வைத்தான்



பாரத சமுதாயம் வாழ்கவென்று

பகலிலும் இரவிலும் யாசித்தான்


கிடைக்காதச் சுதந்திரத்தைக் கிடைத்ததாக நினைத்தேதான்


ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்று பாடினான் 


அடுப்பூதும் பெண்களை படித்து அலுவலகம் காணச்செய்து


சாதிகள் இல்லை எல்லோரும் ஓர் குலமெனச் சொல்லி நெகிழ்ந்து


சிறுவர் முதல் யாவருக்கும் பாட்டெழுதி

பாஞ்சாலி சபதம் என்றும்


கண்ணம்மாவைக்

கனிந்து குழைந்து காதலித்து கவிதை புனைந்து


இளம் வயதிலேயே இறைவனடிச் சேர்நதிட்டாலும்


இயற்றியவை என்னவோ எண்ணில் அடங்காதவை


எதையும் விடாது கவிதையாக எழுதி எழுதி குவித்து வைத்து


சுதந்திர தாகம் ஊற்றி உள்ளே உணர்ச்சிப் பெருக்கி


உள்ளும் புறமும் முப்பொழுதும் தாய்நாட்டுச் சிந்தனைதானே!


சாதிக்கப் பிறந்து சாதித்து மகழ்ந்த சரித்திர நாயகன்!

எங்கள் பாரதியவன்



வி.பிரபாவதி

மடிப்பாக்கம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News