காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிச் செல்ல மாட்டேன்: சசி தரூர் திட்டவட்டம்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிச் செல்ல மாட்டேன்: சசி தரூர் திட்டவட்டம்


திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிச் செல்ல மாட்டேன் என திருவனந்தபுரம் எம்.பி.யும், கட்சியின் மூத்த தலைவருமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.


கேரள தலைநகர் திரு​வனந்​த​புரத்​தில் உள்ள காங்​கிரஸ் அலு​வல​கத்​தில் நேற்று மகாத்மா காந்​தி​யின் நினைவு தினம் அனுசரிக்​கப்​பட்​டது. இதில் திரு​வனந்​த​புரம் காங்​கிரஸ் எம்.பி. சசி தரூர் பங்​கேற்​றார். அப்​போது அவர் நிருபர்​களிடம் கூறிய​தாவது:


நான் தொடர்ந்து காங்​கிரஸில் இருக்​கிறேன். வேறு எங்​கும் செல்ல மாட்​டேன். காங்​கிரஸில் இருந்து விலகிச் செல்ல மாட்​டேன். எனது முந்​தைய கருத்​துகள் பாஜக​வுக்கு ஆதரவான கருத்​துகள் கிடை​யாது. நமது தேசத்​துக்கு ஆதர​வான கருத்​துகள். சில விவ​காரங்​களில் எனது கருத்துகள் மிகைப்​படுத்​தப்​பட்​டன.


ராகுல் காந்தி மதவாதம், பிரி​வினை​வாதம், வெறுப்​புணர்​வுக்கு எதி​ராக குரல் எழும்பி வரு​கிறார். நானும் மதவாதத்தை தீவிர​மாக எதிர்க்​கிறேன். இவ்​வாறு சசி தரூர் தெரி​வித்​தார்.


இதுதொடர்பாக கேரள காங்​கிரஸ் மூத்த தலை​வரும் சட்டப்​பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான சதீசன் கூறும்​போது, “கேரள காங்​கிரஸ் தலை​வர்​களிடையே கருத்து வேறு​பாடு​கள் இல்​லை. நாங்​கள் தலை​மை​க்கு கட்​டுப்​பட்டு செயல்​படு​கிறோம். வரும் தேர்​தலின்​போது 140 தொகு​தி​களி​லும் சசி தரூர் தேர்​தல் பிரச்​சா​ரத்தை முன்​னெடுத்​துச் செல்​வார்​" என்​று தெரி​வித்​தார்​.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%