காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிறந்தநாள்: பிரதமர் மோடி, ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து

புதுடெல்லி,
அகில இந்திய காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே தனது 84-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அதையொட்டி, அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ பிரார்த்திக்கிறேன்." என்று கூறியுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்களுள் ஒருவரான ராகுல்காந்தி எம்.பி. வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்திய மக்களுக்கான உங்கள் தலைமை, உறுதி மற்றும் அர்ப்பணிப்பு எங்களுக்கு எல்லாம் உத்வேகம் அளிக்கிறது. நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். பிரிவினையை விதைத்து ஒற்றுமையை பலவீனப்படுத்தும் சக்திகளுக்கு எதிராக மல்லிகார்ஜுன கார்கே உறுதியாக நிற்கிறார். பிரிவினை சக்திகளுக்கு எதிராக உறுதியாக நின்று இந்தியா கூட்டணியை மல்லிகார்ஜுன கார்கே வலுப்படுத்துகிறார். அவர் உடல் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், " காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான பிறந்தநாள் வாழ்த்துகள். ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கான உங்களின் அர்ப்பணிப்பு, தலைமைத்துவம் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை தொடர்ந்து ஊக்குவிக்கிறது. மக்கள் சேவையில் தொடர்ந்து பணியாற்ற உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்க விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?