news Breaking News
clock

காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் - 17 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் - 17 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு


 

காசா,


காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே 2 ஆண்டுகளாக நடந்து வந்த போரால் இதுவரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அதே சமயம், காசாவில் ஆயிரக்கணக்கான மக்கள் உணவு, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


இதற்கிடையில் போர்நிறுத்தம் கொண்டு வருவது தொடர்பான சர்வதேச சமூகத்தின் அழுத்தத்திற்கு நடுவே, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 20 அம்ச திட்டத்தை ஏற்று, இஸ்ரேல்-ஹமாஸ் தரப்பினர் காசாவில் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டன. பின்னர் டிரம்ப் தலைமையில் எகிப்தில் நடந்த அமைதி மாநாட்டில் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தமும் கையெழுத்தானது.


ஆனால் அதன் பிறகும் இஸ்ரேல் ராணுவத்தினர் காசாவில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் 10-ந்தேதி போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து, இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்களில் இதுவரை 530-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில், காசாவில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 17 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். அதே சமயம், ஆயுதக்குழுவினர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News