காசு, பணம், துட்டு
மூன்று சொற்களால்…
மனசில் நிம்மதி குறைவு,
வங்கியில் வட்டி அதிகம் 😅
வாழ்க்கை வாட்டி வதைக்கும்
காசு இல்லா நாளில்...
அன்பும், பண்பும், மகிழ்ச்சியும்
எதிரிகளாய் முகம் திரும்பும்
சிரிப்பே காணாமல் போகும்
இப்போதுள்ள பொருளாதார
நெருக்கடியில்...
நல்ல மனசு எங்கே?
ATM-ல swipe ஆகுமா?
உதிக்கும் சூரியன்,
வீசும் தென்றல்,
பொழியும் மழை,
ஓடும் நதிகள் ...
பூமி தரும்
இயற்கை எல்லாம் இலவசம்.
ஆனா,
மனிதன் மட்டும்
பேராசைக் கொண்டு
விலைபோட்டு வாழ்கிறான்!
பணத்தை எஜமான் ஆக்காதே!
அது கையில் இருந்தாலும்
இதயத்தில் வைக்காதே! ❤️
ஏனெனில்...
காசு கொடுத்தால் கேபிள் வரும், கருணை உள்ளம் மட்டுமே
இறைவன் கணக்கில் வரும்! 💫
அன்பு தான் permanent balance,
கருணை தான் real wealth,
பணம் இல்லாம இருந்தாலும்...
மனசு full of health! 💚
நா.பத்மாவதி
கொரட்டூர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?