காட்பாடி கிராம தேவதை ஸ்ரீ சுந்தரி அம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு!

காட்பாடி கிராம தேவதை ஸ்ரீ சுந்தரி அம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு!


வேலூர்,பிப்.15-

வேலூர் மாவட்டம், காட்பாடியில் கடலூர் -சித்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது காட்பாடி கிராம தேவதை ஸ்ரீ சுந்தரி அம்மன். அண்மையில் தான் இந்த கோயிலில் கும்பாபிஷேகம் மற்றும் மண்டல பூஜை நடந்து நிறைவு பெற்றது. இந்நிலையில் கிராம தேவதை ஸ்ரீ சுந்தரி அம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் வரிசையில் நின்று ஸ்ரீ சுந்தரி அம்மனை தரிசித்துச் சென்றனர். குறிப்பாக உடல் நலம் குன்றியோர் மற்றும் பயந்த சுபாவம் உள்ள குழந்தைகளுக்கு மந்திர கோல் மூலம் பாஸ்கர் அர்ச்சகர் சிறப்பு பூஜைகளை நடத்தி குழந்தைகளுக்கு பயத்தை போக்கி வருகிறார். இதற்காகவே பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இந்த சுந்தரி அம்மனை தரிசித்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேண்டியவர்களுக்கு வேண்டிய அருளை இந்த சுந்தரி அம்மன் வாரி வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%