இத்தனை மாந்தருக்கு
ஒரு காந்தி போதாது.!
சத்தியத் திருநாயகா..
சமத்துவ ஔி ஏற்றவா.!
முந்தையப் போரிங்கு..
முடிந்ததோ காந்தியே..
இந்தியத் திருநாயகா!
இன்றும் நீ.. திரும்ப வா!
எத்தனைத் தியாகங்கள்..
எத்தனைத் துயரங்கள்.
அத்தனை பொறுத்தீரைய்யா..
அகிம்சை உம் வழிதானைய்யா.!
நித்தமும் நிற வெறிக்கு
எதிராய் களமிரங்கி..
துப்பாக்கிக் குண்டுகளைப்
பரிசாகப் பெற்றீரைய்யா!
ஒற்றை ஆடையுடன்..
ஒன்றுபட வேண்டுமென
சத்தியா கிரத்தையே..
சாற்றிய தலைவனைய்யா..
முற்றிய மதவெறியர்..
குருதியில் நணைத்தாலும்..
சத்திய விதை வைத்து
சாத்வீகம் என்றீரைய்யா!
அன்பெனும் யாழ்மீட்டி..
அகிம்சையில் நெய்யூற்றி..
அறிவொளி தந்தீரைய்யா..
அண்ணலே.. வழி காட்டைய்யா.!
கண்களில் மணியாகி
கருணையின் ஔியாகி
காலத்தை வென்றீரைய்யா..
காந்தியே நீ வாருமைய்யா..!
*வே.கல்யாண்குமார்.*
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?