குறளைப்படி.. திருக் குறளைப்படி ! தமிழனாக பிறந்து விட்டாய்.. அறிந்து படி.. திருக்குறளைப் படி!
படித்தப்படி.. நடப்பதுவே வாழ்க்கைப்படி. ! படிப்படியாய் உயர்வதற்கே குறளைப் படி.. திருக்குறளைப் படி!
நினைத்தப்படி நடப்பதல்ல.. நின்று படி!
நீடுவாழ வேண்டுமெனில் ஊன்றி படி.. அனைத்துயிரும் ஒன்றுயென உணர்த்தும் படி.. அருந்தமிழா வாழவேண்டும் குறளைப் படி! திருக் குறளைப்படி!
அறத்தைப் படி.. பொருளைப் படி.. இன்பம் படி. ! அறிவு என்ற கோவிலுக்கு வாசற்ப் படி! புற உலகில் பெருமையுடன் வாழும் படி.. திரு வள்ளுவனார் எடுத்துரைத்தக் குறளைப் படி! திருக்குறளைப் படி!
உண்டபடி.. கண்டபடி.. சென்றபடி.. உழல்வதற்கோ வந்துதித்தாய் உணர்ந்து படி! என்றும் உன்னை ஏற்றிவிடும் ஏணிப்படி! என்றுணர்ந்து கொண்டபடி.. குறளைப்படி.. திருக்குறளைப் படி!
நமது மறை யாது? என்று அறிந்து படி.! நற்றமிழில் உள்ளதுதான் உணர்ந்து படி! இரண்டடியில் இவ்வுலகு அடங்கும் படி.. எழுதி வைத்தார் வள்ளுவமாய் வாழ்ந்து படி.! குறளைப் படி.. திருக்குறளைப் படி!
*வே.கல்யாண்குமார்.*
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?