குயவர் குழைத்த மண்ணில்
குழியாகி சிறிய கிண்ணமாய்
கொஞ்சம் துளியாய் கூர் வைத்து
புதிய விளக்கை நீரில் போட்டு
துடைத்து மஞ்சள் குங்குமமிட்டு
நெய்யூற்றி பஞ்சுத் திரி போட்டு
மெல்ல தீக்குச்சி நுனிப் பொறியில்
முத்துப் போல் தீபமேற்றி வைக்க
இருள் நீக்கி ஒளி சேர்க்கும்
தீபத் திருநாளாம்
கார்த்திகை மாதம்
கந்தனுக்கு அரோகரா போட்டு
கைகூப்பித் தொழும் நேரம் நம்
கலிதீரும் கவலை போகும் காண்
வி.பிரபாவதி
மடிப்பாக்கம்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%