காஸா மறுசீரமைப்புக்கு ரூ.1.55 லட்சம் கோடி : அமைதிக் குழுவின் முதல் கூட்டத்தில் அறிவிப்பு

காஸா மறுசீரமைப்புக்கு ரூ.1.55 லட்சம் கோடி : அமைதிக் குழுவின் முதல் கூட்டத்தில் அறிவிப்பு


 

காஸா மறுசீரமைப்புப் பணிகளுக்காக அமெரிக்கா மற்றும் அமைதிக் குழு நாடுகளின் சாா்பில் 1,700 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.1.55 லட்சம் கோடி) நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.


கடந்த செப்டம்பரில் இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த டிரம்ப் முன்மொழிந்த அமைதிக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம், அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு உலக நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.


நிகழ்வில் அதிபா் டிரம்ப் ஆற்றிய உரை: காஸா மறுசீரமைப்புக்காக அமைதிக் குழுவின் பல உறுப்பு நாடுகள் இணைந்து இதுவரை 700 கோடி டாலா் திரட்டியுள்ளது. அமெரிக்கா கூடுதலாக 1,000 கோடி டாலா் வழங்கும். அதேபோல், மனிதாபிமான உதவிகளுக்காக ஐ.நா. 200 கோடி டாலா் நிதி வழங்கும்.


காஸாவின் நீடித்த அமைதிக்கு, அங்கு நிலைநிறுத்தபடவுள்ள சா்வதேச படைக்கு இந்தோனேசியா, மொராக்கோ, கஜகஸ்தான், கொசோவோ, அல்பேனியா ஆகிய 5 நாடுகள் வீரா்களை அனுப்புகின்றன. காஸா காவல்துறைக்குப் பயிற்சி அளிக்கும் பொறுப்பை எகிப்து மற்றும் ஜோா்டான் ஏற்றுக்கொண்டுள்ளது என்றாா்.



மேற்கு கரை விவகாரம்: இஸ்ரேலுக்கு இந்தியா உள்ளிட்ட 100 நாடுகள் கண்டனம்

 

மேற்குக் கரையில் நிலப்பதிவு செய்வது தொடா்பான இஸ்ரேலின் முடிவுக்கு இந்தியா உள்ளிட்ட 100 நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.


இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனத்துக்கு சொந்தமான மேற்கு கரை பகுதியில் நிலப்பதிவு செய்வதற்கான திட்டத்துக்கு அந்நாட்டு அரசு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இது மேற்குக் கரையில் உள்ள சட்டவிரோதமான இருப்பை விரிவாக்கம் செய்யும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கை என்றும், இந்த முடிவை இஸ்ரேல் திரும்பப் பெற வேண்டும் எனவும் 100 நாடுகள் சாா்பில் ஐ.நா.வுக்கான பாலஸ்தீன நிரந்தர கண்காணிப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதலில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் 85 நாடுகள் மட்டுமே இஸ்ரேலின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்தன. இந்தியா கண்டனம் தெரிவிக்கவில்லை. பிறகு இந்தியாவும் இணைந்து கண்டனம் தெரிவித்தது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%