*_நந்தவனத்தில் ஒரு நாள் ராதையும் கிருஷ்ணரும் பேசிக் கொண்டு இருந்தனர்._*
ராதை பேசிக் கொண்டு இருக்கும் போது ஸ்ரீ கிருஷ்ணரின் தலை மட்டும் ஏதோ பாட்டை கேட்டு ரசித்த வண்ணம் அவரது தலை மட்டும் அசைந்தவாரே இருந்தது.
நான் பேசுவது உங்கள் காதுகளில் விழுகிறதா இல்லையா? அப்படி என்னத்தைத்தான் ரசிக்கிறீர்களோ?? கோபித்தாள் ராதை.
என்ன அருமையான பாடல், சூர்தாஸரின் பாடல். அவர் எப்போதும் என்னை விடுபட முடியாதவாறு பாடலின் மூலம் கட்டிப் போடுகிறார் என்றார்.
எப்போது பார்த்தாலும் சூர்தாஸ் சூர்தாஸ் என சொல்லியபடி இருக்கின்றீர்களே! அவரை போய் பார்த்து விட்டு வருகிறேன் என கிளம்பினாள் ராதை..
நீ அவரை பார்க்க நீ போக வேண்டாம் என தடுத்தார் ஸ்ரீ கிருஷ்ணர். ஸ்ரீ கிருஷ்ணரின் பேச்சை கேளாமல் ராதை சூர்தாஸரை பார்க்க ஓடினார்.
சூர்தாஸ் பாடிக் கொண்டிருந்த கோவிலுக்கு வந்தாள் ராதை. பிறவிக் குருடரான சூர்தாஸரின் அருகில் அவள் போய் நின்றாள்.
அவளது கொலுசில் இருந்து தெய்வீக சப்தம் வந்ததை உணர்ந்த சூர்தாஸ் கையை நீட்டி அவள் கொலுசைப் பிடித்துகொண்டார் .
விடாபிடியாக பிடித்தவர் கொலுசை கழட்டி எடுத்த வண்ணம் இருந்தவரிடம் ராதை, கிருஷ்ணனை சேர்ந்தவள் நான், ராதை எனது பெயர் என்றார்.
சூர்தாஸர் உனக்கு இந்த கொலுசு வேண்டுமானால் ஸ்ரீகிருஷ்ணனை இங்கே வரச்சொல் என்றார்.
ராதை கிருஷ்ணரை அழைத்தார். ஸ்ரீ கிருஷ்ணர் அங்கே வந்து பார்வையற்ற சூர்தாஸருக்கு பார்வை அளித்து, தனது திவ்ய தரிசனத்தை காட்டினார்.
சூர்தாஸரே உங்களுக்கு என்ன வரம் வேண்டுமோ கேளுங்கள் என்றார்.
சூர்தாஸரோ ராதையிடம் கொலுசை கொடுத்த வண்ணம், கிருஷ்ணா எனது கண்களை மீண்டும் குருடாக ஆக்குங்கள் என்றார்.
திகைத்து நின்ற ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து, தங்களைக் கண்ட கண்களால் இனி யாரையும் எதையும் பார்க்க விரும்பவில்லை, ஆகையால் கிருஷ்ணா எனது கண்களை குருடாக்குங்கள் என்றார்.
மீண்டும் சூர்தாஸர் குருடரானார். கண்ணனும் ராதையும் திரும்பும் போது, ராதை வாய் ஓயாமல் சூர்தாஸ் பற்றியே கிருஷ்ணரிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
இதற்குத் தான் நான் அப்பொழுதே சொன்னேன் ராதா , சூர்தாசைப் போய்ப் பார்க்காதே என்று, புரிகிறதா! என்றார் கண்ணன்.

அனுப்புதல்:
ப. கோபிபச்சமுத்து
பாரதியார் நகர்
கிருஷ்ணகிரி - 1
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?