குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றியத்தில் பணிபுரியும் 120 ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான திறன் பயிற்சி
Jul 30 2025
116

குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றியத்தில் பணிபுரியும் 120 ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான திறன் பயிற்சி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை 6- ஆம் வகுப்பு முதல் 9- ஆம் வகுப்பு வரை வகுப்பு பள்ளியில் கற்றல் கற்பித்தலில் ஈடுபடக்கூடிய பட்டதாரி ஆசிரியருக்கான பயிற்சியை அகர ஒகை பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயவேல் தலையேற்று துவக்கி வைத்தார், வட்டார கல்வி அலுவலர் விமலா பயிற்சிக்கு முன்னிலை ஏற்றார், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் பேராசிரியர் ரமேஷ் சிறப்புரை ஆற்றினார். பயிற்சி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பூபாலன் மற்றும் ஆசிரியர் கருத்தாளர்கள் காத்தமுத்து, மணிகண்டன், ஜெயசுதா ஆகியோர்கள் கலந்து கொண்டு ஒன்றியத்தில் பணிபுரியக்கூடிய சுமார் 120 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கினர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?