வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 30.07.25

வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 30.07.25


தமிழ் நாடு இ பேப்பரின் வாசக சொந்தங்கள், ஆசிரியர் குழுமத்தினர் 

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்...!


ஆபரேஷன் சித்தூர் 

எதிர் காலத்திலும் 

தொடரும்.

பிரதமர் மோடி 


சொன்ன கருத்தை திரும்பப் பெற்று கார்கேவிடம் மன்னிப்பு கேட்ட நட்டா 


தேசப்பற்றில் தமிழர்கள் ஒன்றும் குறைந்தவர்கள் கிடையாது --

அமித்ஷாவிற்கு கனிமொழி பதிலடி 


ஆபரேஷன் சிந்தூரின் போது படைகளின் கைகளை அரசே கட்டிப் போட்டது.

மக்களவையில் ராகுல் காட்டம்.


இப்படி முதல் பக்கம் முழுவதும் பார்லிமென்ட் செய்திகளாக வெளி வந்திருந்தது சிறப்பு.

ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் மக்களவையில் ஆக்கப்பூர்வமான விவாதங்களில் சளைக்காமல் ஈடுபடுவது ஜனநாயக 

வளர்ச்சிக்கு அதி முக்கியம் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடம் கிடையாது தான்.

ஆனாலும் நம்மூர் அரசியல் கட்சிகள் தத்தமது கட்சிகளின் 

தங்களின் தங்கள் குடும்பங்களின் நலன் 

கருதி செயல் படுவது தான் நமக்கு வருத்தத்தையும் அவ நம்பிக்கையையும் அளிக்கிறது. இதற்கு எந்த கட்சியும் விதி விலக்கு இல்லை என்பது தான் உச்ச சோகம்.


சிந்திக்க ஒரு நொடி 

சிரித்துக் கொண்டே கடந்து விடுங்கள்.

உங்கள் கஷ்டங்களை 

மட்டுமல்ல...உங்களை கலங்க செய்தவர்களையும் கூட...


இந்த வரிகள் சிந்தையை கவர்ந்து 

யோசிக்க வைத்தது.

சபாஷ்!

இன்றைய திருக்குறள் 

தந்த பாடம் மிகவும் 

உன்னதமானது.

உள்ளத்தில் பற்றிக் கொண்டேன்.

நலம் தரும் மருத்துவம் 

பகுதியில் வெண்டைக்காய் பற்றிய செய்திகள் 

மிகவும் பயனுள்ள தாக 

இருந்தது.

தமிழ் நாடு இ பேப்பரின் டாப் 5 ல் 

நலம் தரும் மருத்துவம் 

பகுதிக்கு நிச்சயம் இடம் உண்டு.


உயர் கல்வியை சீரமைக்க உடனடி நடவடிக்கை தேவை 

முதல்வர் ஸ்டாலினுக்கு பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் பால குரு கோரிக்கை.


செவி சாய்த்தால் மாநிலம் செழித்து செழுமையுறும்.


நியூஸ் பேப்பர், டிவி பற்றி மக்கள் மனதில் 

நிலவும் எண்ணத்தை மிகச் சரியாக சித்தரித்து கவனம் பெற்றது நன்னிலம் இளங்கோவனின் நிம்மதியான வாழ்க்கை.

இந்தக் கதையைப் படிக்கும் போது தமிழ் நாடு இ பேப்பரின் 

நினைவு தான் ஓடோடி வந்தது.

நித்தம் நித்தம் தரமான செய்திகளை கண்ணியமான முறையில் வழங்கி அதுவும் எந்தவொரு சிரமத்தையும் தராமல் தானாகவே முன்வந்து 

அதிகாலையிலேயே 

அலைபேசியில் வந்து சேரும் நேர்த்தி பிளஸ் நேர்மையையும் நினைவுப் படுத்தியது நிம்மதி வாழ்க்கை சிறுகதை. எழுத்தாளருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

வட்டார செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆசிரியரின் சீரிய சிந்தனை பாராட்டுக் குரியது.

இன்னும் சொல்லி சொல்லி மகிழலாம்.


தெய்வம் பற்றி ஒரு வார்த்தை சொல்ல வில்லை என்றால் 

கடிதம் நிறைவடையாது.

வேறு எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் உலக துணிச்சலில் 

தமிழ் நாடு இ பேப்பரை வெற்றிகரமாக வழி நடத்தி வரும் தலைமைக்கு வாசக சொந்தங்களாகிய நமது பங்களிப்பு 

தெய்வம் பத்திரிகை யின் சர்குலேஷனை 

கூடுதல் உயரத்திற்கு 

கொண்டு செல்ல வேண்டும்.

இதை சபதமாக எடுத்து செய்ய வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் 

நல்ல முறையில் வழி காட்டுவான்.

நல்லதை நினைப்போம்.

நல்லதே நடக்கும்.



பி.வெங்கடாசலபதி

தென்காசி 

.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%