குறைவான பயணிகள் முன்பதிவு மைசூருவிலிருந்து இயக்கப்படும் 6 சிறப்பு ரயில்கள் ரத்து!
Oct 28 2025
10
சென்னை, அக்.25- குறைவான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதால் மைசூருவிலிருந்து இயக்கப்படும் 6 சிறப்பு ரயில்களை தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளதாக தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மைசூரு - நெல்லை இடையே திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்பட வேண்டிய சிறப்பு ரயில் வண்டி எண் 06239/06240 அக்டோபர் 27 முதல் நவம்பர் 25 வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மைசூரு - காரைக்குடி இடையே வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் வண்டி எண் 06243/06244 அக்டோபர் 30 முதல் நவம்பர் 29 வரை இயக்கப்பட வேண்டியிருந்த நிலையில், இதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மைசூரு - இராமேஸ்வரம் இடையே அக்டோபர் 27 மற்றும் 28 தேதிகளில் இயக்கப்பட வேண்டிய சிறப்பு ரயில் வண்டி எண் 06237/06238 ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?