நெல் ஈரப்பதம்: திருவள்ளூர், திருவாரூரில் மத்திய குழுவினர் 2வது நாளாக ஆய்வு

நெல் ஈரப்பதம்: திருவள்ளூர், திருவாரூரில் மத்திய குழுவினர் 2வது நாளாக ஆய்வு



திருவள்ளுர் மாவட்டம் செம்பேடு ஊராட்சி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

திருவள்ளூர், அக். 26–


நெல் ஈரப்பதம் குறித்து திருவள்ளூர், திருவாரூரில் மத்திய குழுவினர் 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.


திருவள்ளுர் மாவட்டம் செம்பேடு ஊராட்சி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இன்று 2வது நாளாக மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.


மத்திய உணவுத்துறை உதவி இயக்குநர் டி.எம்.ப்ரீத்தி தலைமையில் தொழில்நுட்ப அலுவலர்கள் பிரியா பட் , அனுபமா, வேலூர் இந்திய உணவு கழகம் மேலாளர் அருண் பிரசாத், தமிழ்நாடு வாணிப நுகர்பொருள் கழகம் முதுநிலை மேலாளர் கே.சி. உமா மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர் திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் முன்னிலையில் நெல் ஈரப்பதம் கண்டறியும் கருவியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.


ஆய்வுக்கு பின் மாவட்ட கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நெற்பயிர்கள் மற்றும் விவசாயிகள் அறுவடை செய்த பின்னர் அவற்றில் உள்ள ஈரப்பதம் அதிக அளவில் உள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வாயிலாக ஒன்றிய அரசு 17 சதவீதம் ஈரப்பதம் இருப்பதும் இருந்தால் அதிகபட்ச அளவு, அதற்கு மேல் உள்ள நெல் கொள்முதல் செய்ய இயலாது. முதலமைச்சரிடம் பல்வேறு விவசாய சங்கங்கள் வைத்த கோரிக்கை தொடர்ந்து, அதன் அடிப்படையில் இருப்பத உற்சவரம்பு உயர்த்த வேண்டும் என ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் கோரிக்கை வைக்கத்தார். அந்தக் கோரிக்கையின் படி ஒன்றிய அரசு 3 மத்திய குழுக்களை அமைத்து தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் மூன்றாவது குழு வட தமிழகம் மாவட்டங்கலான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஆய்வு கொண்டனர். நேற்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்திலும். இன்று திருவள்ளூர் மாவட்டத்திலும், இன்று மதியம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு மேற்கொள்கின்றனர். ஈரப்பதம் குறத்து தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்ய உதவி இயக்குநர், 2 தொழில்நுட்ப அலுவலர்கள், நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்களும் ஆய்வுகளில் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெருப்பயிர்களில் எவ்வளவு ஈரப்பதம் உள்ளது, அதன் சராசரி அளவெடுத்து ஒன்றிய அரசிற்கு அறிக்கையாக வழங்கப்படவுள்ளது. பின்னர் ஒன்றிய அரசின் கொள்கை முடிவு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள துவக்கப்படும். இதனைத் தொடர்ந்து காக்கவாக்கம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய வட்டங்களில் ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர் என்றார்.


இவ்ஆய்வுகளின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், மண்டல மேலாளர் குணசேகர். துணை மண்டல மேலாளர் சீனிவாசன், திருவள்ளுர் வட்டாட்சியர் பாலாஜி மற்றும் துறை சார் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.


திருவாரூர்


திருவாரூர் மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் மன்னார்குடி ரயில் நிலையத்தில் இரயில் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் வெளிமாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருவதையும் திருவாரூர் கலெக்டர் மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.


இந்த ஆய்வில், கலெக்டர் தெரிவித்ததாவது:–


திருவாரூர் மண்டலத்தில் வேளாண்மைத்துறை அறிக்கையின்படி, இதுவரை சுமார் 64,311 ஹெக்டர் அறுவடை பணி 83 சதவீதம் நிறைவு பெற்று, மீதமுள்ள சுமார் 13,262 ஹெக்டர் அறுவடை பணி நடைபெற வேண்டியுள்ள நெல் மணிகளை கொள்முதல் செய்ய ஏதுவாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


தினசரி மன்னார்குடி, நீடாமங்கலம் மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய மூன்று இரயில் தலைப்புகளிலிருந்து தலா 2000 டன் வீதம் 6000 மெ.டன்களும் மண்டலத்திலுள்ள நெல் சேமிப்பு மையங்களுக்கு தினசரி 4000 மெ.டன்களும் ஆகக்கூடுதலாக சுமார் 10000 மெ.டன்கள் இயக்கம் செய்யப்பட்டுவருகிறது. இந்தாண்டு இதுநாள் (25–ந் தேதி) வரை 2,08,667 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு கொள்முதல் பணி நடைபெற்றுவருகிறது.


இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.


இவ்ஆய்வில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%