மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சென்னையில் 64,270 மரக்கிளைகள் அகற்றம்
Oct 28 2025
14
சென்னை, அக்.28–
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் இருந்த மரக்கிளைகள், கடந்த ஜூலை முதல் இதுவரை 64,270 மரக்கிளைகள் அகற்றப்பட்டன. தற்போது பெய்த மழையின் காரணமாக விழுந்த 41 மரங்கள் மற்றும் மரங்களின் கிளைகளும் அகற்றப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைக்காலத்திற்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1.7.2025 முதல் 24.10.2025 வரை திருவொற்றியூர் மண்டலத்தில் 2,572, மணலி மண்டலத்தில் 3,069, மாதவரம் மண்டலத்தில் 3,791, தண்டையார்பேட்டை மண்டலத்தில் 2,302, இராயபுரம் மண்டலத்தில் 2,694, திரு.வி.க.நகர் மண்டலத்தில் 7,179,
அம்பத்தூர் மண்டலத்தில் 4,219, அண்ணாநகர் மண்டலத்தில் 5,090, தேனாம்பேட்டை மண்டலத்தில் 7,121, கோடம்பாக்கம் மண்டலத்தில் 6,285, வளசரவாக்கம் மண்டலத்தில் 4,550, ஆலந்தூர் மண்டலத்தில் 3,883, அடையாறு மண்டலத்தில் 3,006, பெருங்குடி மண்டலத்தில் 4,998, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 3,511 என மொத்தம் 64,270 மரங்களின் கிளைகள் கத்தரித்து அகற்றப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்காக ஹைட்ராலிக் மர அறுவை இயந்திர வாகனங்கள் 15, ஹைட்ராலிக் ஏணி 2, கையடக்க மர அறுவை அறுப்பான் 224, டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள் 216 என மொத்தம் 457 மர அறுவை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும், 17.10.2025 அன்று முதல் தொடங்கிய வடகிழக்குப் பருவமழையின் காரணமாக 25.10.2025 வரை விழுந்த 41 மரங்களும் உடனடியாக அகற்றப்பட்டது.
வடகிழக்குப் பருவமழையின் காரணமாக விழும் மரங்களை உடனுக்குடன் அகற்றுவதற்காக மண்டலத்திற்கு தலா 12 பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மரக்கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ஒரு டாடா ஏஸ் வாகனம் என 15 வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?